திருப்பூர் அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பனியன் நிறுவன தொழிலாளி மற்றும் அவரது மனைவி பலி; இரு குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை.

சுல்தான்பேட்டை அருகே பைக் சென்று கொண்டிருந்த போது, பின்னே வந்த லாரி, மோதியதில் இரி சக்கர வாகனத்தில் சென்ற கணவன் - மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.


திருப்பூர்: திருப்பூர் - மங்கலம் சாலையில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் செல்வம் என்பவர் தனது மனைவி பழனியம்மாள் மற்றும் இருமகன்கள்சஞ்சய் (8) மற்றும் சரவணன் (7) ஆகியோருடன் திருப்பூரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது, சுல்தான்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னே வந்த லாரி, இரு சக்கர வாகனத்தில் மோதியதில் வாகனத்தில் சென்றவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தில், செல்வம் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 



விபத்தில் காயமடைந்தஇரண்டு குழந்தைகளும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் மங்கலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...