நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தினத்தன்று விடுமுறை அளிக்க தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அதாவது 1951 பிரிவு 135 படி தேர்தல் நடைபெறும் தினத்தன்று அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு.


கோவை: கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அதாவது 1951 பிரிவு 135 படி தேர்தல் நடைபெறும் தினத்தன்று அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கோவை தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி கூடுதல் தொழிலாளர் ஆணையர் பொன்னுச்சாமி மற்றும் தொழிலாளர் இணை ஆணையர் நீலாவதி அறிவுறுத்தலின் படி மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அதாவது 1951 பிரிவு 135 படி தேர்தல் நடைபெறும் தினத்தன்று அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், தேர்தல் அன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுப்பு வழங்கப்படுவது தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இது சம்பந்தமாக, புகார் தெரிவிக்க கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் 944539872, கோவை மாநகரில் அப்துல் கபூர் 98430 29910, முருகானந்தம் 80563888 46, ராணி லட்சுமிபாய் 948936l 802, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் ஆர்எஸ் புரம் பகுதியில் தீபா பாரதி 994789312, மேட்டுப்பாளையத்தில் செல்லப்பா 99424370 22, பொள்ளாச்சியில் வாசுதேவன் 9626440609, ஆகியோரை தொடர்பு கொள்ளலாம், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...