உதகையில் மாணவிக்கு கட்டாய திருமணம் தாய், டிரைவர் போக்சோவில் கைது

நீலகிரி மாவட்டம் உதகையில், பள்ளிக்கு செல்லும் மாணவியை கட்டப்படுத்தி திருமணம் செய்ய உதவிய தாய் மற்றும் அவரை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில், பள்ளிக்கு செல்லும் மாணவியை கட்டப்படுத்தி திருமணம் செய்ய உதவிய தாய் மற்றும் அவரை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகையை சேர்ந்த 15 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவியின் தாய் அவரை சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவரான செல்வராஜ்(26) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளார்.

அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கும், செல்வராஜூக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து, செல்வராஜ் மாணவியை அழைத்து கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார். பின்னர், செல்வராஜ், மாணவியுடன் உதாகைக்கு வந்து தங்கியுள்ளார்.

இதற்கிடையே, மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக நீலகிரி மாவட்ட சைல்டு லைன் அமைப்புக்கு புகார் வந்தது. இதுகுறித்து, அந்த அமைப்பினர் உதகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில், போலீசார் மாணவியின் தாய் மற்றும் அவரை திருமணம் செய்த செல்வராஜ் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து தனித்தனியாக விசாரித்தனர்.விசாரணையில், மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் மாணவியின் தாய் மற்றும் அவரை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் செல்வராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...