இரவு நேரங்களில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி: குன்னூர் அருகே கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அட்டடியைச் சேர்ந்தவர் சூசைநாதன். இவரது தாயார் ரோசி (75). இரவு காவல் பணிக்கு சூசைநாதன் சென்ற நிலையில், ரோசி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டின் கதவை உடைத்து, ஒரு கரடி உள்ளே புகுந்துள்ளது. அப்போது, சத்தம் கேட்டு மூதாட்டி அலறினார்.
இந்த நிலையில், தான் துாங்கிய அறையின் கதவை மூதாட்டி திறக்காததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர், கரடி அங்கிருந்து தப்பிச் சென்றது.
இது குறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினர், கரடியின் கால் தடங்களை பதிவு செய்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் கரடி, சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் அச்சத்துடன் சென்று வருகிறோம். வனத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.