கோவையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு..!

அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுத் தொகை வழங்கினார்.


கோவை: கோவையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுத்தொகை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 16 மாணவ, மாணவிகளுக்கும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற 4 மாணவ மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் சமீரன் பரிசுத் தொகை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.



பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவ மாணவிகளுக்கு தலா 5000 ரூபாய், இரண்டாம் பரிசு வென்ற மாணவ மாணவிகளுக்கு தலா 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு வென்ற மாணவ மாணவிகளுக்கு தலா 2000 ரூபாயும், திருக்குறள் ஒப்புவித்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 10000 ரூபாய்க்கான காசோலையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...