இது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், துண்டிக்கப்பட்ட தலையை தேடும் பணி நடந்து வருகிறது.
திருப்பூர்: திருப்பூரில் செல்போன் வழிப்பறியின் பொது ஏற்பட்ட தகராறில் பனியன் நிறுவன தொழிலாளி தலையை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தை சேர்ந்தவர் சதீஷ் (23). இவரது நண்பர் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் (22). இவர்கள் இருவரும் திருப்பூர் எஸ் ஏ பி பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். அந்த நிறுவனத்தில் வேலை சரியாக இல்லாததால் நண்பர்கள் இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேரங்காட்டில் உள்ள வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சதீஷ் மற்றும் ரஞ்சித் இருவரும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். இதன் பின்னர் இரவு 10 மணி அளவில் செரங்காடு காட்டுப்பகுதி வழியாக இருவரும் நடந்து வந்துள்ளனர்.
அப்போது, 3 மோட்டார் சைக்கிளில் 5 பேர் கொண்ட கும்பல் வந்து, சதீஷிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர். இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அந்த கும்பல் சதீசை மோட்டார் சைக்கிளில் தூக்கிச் சென்று கொலை செய்து தலையை துண்டித்து எடுத்துச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து, வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய ரஞ்சித் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன. சதீஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தலையை தேடும் பணி நடந்து வருகிறது.