கோவையில் இதுவரை பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் ரூ. 1.27 கோடி பறிமுதல்..!

வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படுகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில், 1.27 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில், 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேர தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் இன்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம், பறிமுதல் செய்யப்பட்டு வட்டார கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தற்போது வரை, 1.27 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐந்து மண்டலத்துக்குட்பட்ட மாநகராட்சியில் மட்டும் 42 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' என்றனர்

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...