நீலகிரியில் வடக்கு, தெற்கு வன கோட்டத்தில், 21 இடங்களில் ஒரே நேரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு துவங்கியது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 21 இடங்களில் ஒரே நேரத்தில் துவங்கியது.
நீலகிரி மாவட்டத்தில், வனத்துறை சார்பில், நீலகிரி தெற்கு, வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மலைத் தொடர், சதுப்பு நிலங்களில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு துவங்கியது.
இதனையொட்டி, நேற்று காலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்கள், பறவை ஆர்வலர்களுக்கு மாவட்ட வன அலுவலர் சச்சின், பறவைகள் ஆர்வலர் ரங்கசாமி ஆகியோர் பயிற்சி மற்றும் ஆலேசானைகளை வழங்கினர்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் சச்சின் நிருபர்களிடம் கூறுகையில்:-
நீலகிரியில், வடக்கு, தெற்கு வன கோட்டத்தில், 21 இடங்களில் ஒரே நேரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நேற்று துவங்கியது. இன்று மாலை வரை நடைபெறுகிறது.
இதில், நீலகிரி வாழ் பறவைகள், இடம் பெயர்ந்து வந்த பறவைகள், அரிய வகை பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன் முடிவுகள் ஆய்வுக்குப் பின்பு அறிவிக்கப்படும்,' என்றார்.