பல்லடத்தில் ஆள் கடத்தலில் ஈடுபட்டு, சிறையில் உள்ள 13 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - மாவட்ட காவல்துறை நடவடிக்கை.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஆள் கடத்தலில் ஈடுபட்டு பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள 13 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்த மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஆள் கடத்தலில் ஈடுபட்டு பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள 13 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்த மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த 15.12.21 அன்று தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் மாலி, சதீஷ் போன் இக்ரய், கஞ்சுன் முன்னா ஆகியோர் பணி முடித்து கரைப்புதூர், லட்சுமி நகரில் இருந்து முருகம்பாளையம் செல்லும் ரோட்டில் கே. பி.என். கம்பெனி அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு இன்னோவா காரில் வந்த 4 நபர்கள் நடந்து சென்ற மூவரையும் காரில் கடத்திச் சென்றனர். கை, கால்களை, கம்பி மற்றும் பிளாஸ்டிக் பைப் ஆகியவற்றாலும் தாக்கி, மூவரின் உறவினர்களிடம் பணம் ரூபாய் . 3,00,000 / கேட்டு மிரட்டியும் அதில் ரூபாய் .27,500 / - ஐ ஆன்லைனில் பெற்றுக்கொண்டு 18.12.201 அன்று கோவை பேருந்து நிலையத்தில் மூவரையும் இறக்கிவிட்டு தப்பியோடினர் .



இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரனை செய்த பல்லடம் போலீசார், மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட அசாமை சேர்ந்த பாப்பு மியாஸ், பீகாரை சேர்ந்த நிஷாஅன்சாரி, ராஜ்குமார், சிவகங்கையை சேர்ந்த அமர்நாத் மற்றும் முத்துப்பாண்டி உள்ளிட்ட 13 நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



மேலும், விசாரணை மேர்கொண்டதில், அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, 13 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் வினித் அவர்கள் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவைபிறப்பித்தார் .

இன்று சிறையில் இருந்த 13 நபர்களிடமும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு வழங்கப்பட்டது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...