நில அபகரிப்பு என்று பொய் வழக்குப் போட்டு சிறையில் கணவர் அடைக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க வேட்பாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை: நில அபகரிப்பு என்று பொய் வழக்குப் போட்டு சிறையில் கணவர் அடைக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க வேட்பாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை பேரூர் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மனைவி சரோஜினி (74). இவர் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் கடந்த 9 ஆம் தேதி காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து வருவதாகக் கூறி சரோஜினியின் கணவர் மாணிக்கத்தை போலீஸார் சிலர் அழைத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து சரோஜினி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பார்த்த போது விசாரணை முடிந்த பிறகு மாணிக்கத்தை அனுப்பி விடுவதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் வீட்டிற்குச் சென்று விட்டார்.
மறுநாள் காலை தனது கணவர் மாணிக்கம் கைது செய்யப்பட்டு பல்லடம் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகச் செய்திகளில் வந்த தகவலை அறிந்து சரோஜினி அதிர்ச்சி அடைந்தார்.
ஏற்கனவே சொத்து சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் எந்த விதமான பிடிவாரண்டும் இல்லாமல் தனது கணவரைச் சிறையில் அடைத்தது தவறு என்றும் அ.தி.மு.க வேட்பாளராக உள்ளாட்சித் தேர்தலில் நான் போட்டியிடுவதால் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
இது திட்டமிட்ட சதி என்றும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தித் தீர்வு ஏற்படுத்தித் தருமாறு அந்த மனுவில் சரோஜினி தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரின் கணவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.