சிங்காநல்லூர் குளத்தில் அரியவகை சிறு நறுவிலி தாவரம் நடப்பட்டது

உலக நீர்நிலை தினத்தை முன்னிட்டு கோவை பகுதியில் மட்டுமே காணப்படும் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளவற்றை பாதுகாத்தல் மற்றும் மீண்டும் அறிமுகப்படுத்துதல் நிகழ்வு சிங்காநல்லூர் குளத்தில் நடைபெற்றது.


கோவை: உலக நீர்நிலை தினத்தை முன்னிட்டு கோவையில் மட்டுமே காணப்படும் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை சிறு நறுவிலி தாவரம் சிங்காநல்லூர் குளத்தில் நடப்பட்டது.

இதில் கோவையில் மட்டுமே காணப்படும் அரியவகை சிறு நறுவிலி தாவரம் தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினரால் சிங்காநல்லூர் குளத்தில் நடப்பட்டது. இந்த தாவரத்தின் பெயர் கோவை மாஞ்சாக் தாவரம் அல்லது சிறு நறுவிலி தாவாரம்.

இது ஒரு மீட்டர் உயரமுள்ள புதர் செடியாகும். மரக்கிளைகளின் அனைத்து திசைகளிலும் பரவி வளரக்கூடியது. ஆண்டு முழுவதும் பூக்கும் மற்றும் காய்க்கும். இந்த தாவரம் முதன்முதலில் டாக்டர் செரியன் ஜேக்கப் என்பவரால் 2 மே 1938 இல் கண்டுபிடிக்கப்பட்டது.



இந்த உள்ளூர் தாவரத்தின் வாழ்விடமானது மனித குறுக்கீடுகளால் மிகவும் தொந்தரவு செய்யப்பட்டது. கோவை நகரின் இந்த அரிய வகை தாவரத்தை பற்றி அறிவும் விழிப்புணர்வும் ஏற்படுத்த சிங்கநல்லூர் குளத்தில் நேற்று தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையால் நடப்பட்டது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோ, கோவை வனமரபியல் மற்றும் இனப்பெருக்கும் இயக்குநர் குன்னி கண்ணன், விஞ்ஞாணி நாகராஜன், சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மைய விஞ்ஞாணி ப்ரோமோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...