கோவையில் மின் மோட்டார் திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு..!

கோவை புதூர் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியின் காம்பவுண்ட் சுவரை தாண்டிக் குதித்து மின்சார மோட்டார் ஒன்றை திருடிச் சென்றனர்.


கோவை: கோவையில் மின் மோட்டார் திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை பி கே புதூர் பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவரின் மகன் சௌந்தர்ராஜன்(63). இவர் கோவை புதூர் பகுதியில் உளள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 3 மர்ம நபர்கள் பாலிடெக்னிக் கல்லூரியின் காம்பவுண்ட் சுவரை தாண்டிக் குதித்து கல்லூரி வளாகத்திற்குள் வந்து மின்சார மோட்டார் ஒன்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சௌந்தரராஜன் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் ரமேஷ் (19), குமார் என்பவரின் மகன் குணா (19) கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன் (19) ஆகிய மூவரும் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து மின் மோட்டாரை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...