கோவை ரெட் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கு: கணவன்-மனைவி சென்னையில் கைது; விஷ ஊசி செலுத்தி கொலை செய்தது அம்பலம்.

வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமால், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. செல்வ நவரத்தினம் பாராட்டினார்.


கோவை:கோவையில் தனியார் டாக்ஸி என்ற நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த நபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சென்னையை சேர்ந்த கணவன்- மனைவி இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து லேப்டாப், 20 செல்போன்கள், உருட்டுக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 9-ம் தேதி காலை, கோவை வடவள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓணாம்பாளையம் ,அருகே ரெட் டாக்ஸி ஓட்டுனர் சோனு என்பவர் அவரது டாக்ஸி அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் 103/2022, 147 உட்பட சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், கோவை மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. விசாரணையில், சென்னையை சேர்ந்த ஸ்டீபன் 45, கடந்த 8-ம் தேதி இரவு கடைசியாக கால் டாக்ஸி புக் செய்து பயணம் செய்ததும் அவருடைய மனைவி அமலோற்பவம் அவருடன் சென்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து, அவர்கள் இருவரையும் சென்னையில் வைத்து தனிப்படையினர் கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.

விசாரணையில்,கால் டாக்சி டிரைவரை கட்டையால் அடித்தும், விஷ ஊசி செலுத்தியும் கொலை செய்து விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

அவர்களிடமிருந்து உருட்டுக்கட்டை, 20 -க்கும் மேற்பட்ட செல்போன்கள் லேப்டாப் உட்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஸ்டீபன் மீது 4 கொலை வழக்குகள், அவருடைய மனைவி அமலோற்பவம் மீது 2 கொலை வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



கொள்ளை அடிக்க, விஷ ஊசி செலுத்தி கொலை செய்து விட்டு பின்னர், கொள்ளை அடித்து வருவதைவழக்கமாக கொண்டுள்ளனர்.

துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமால், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. செல்வ நவரத்தினம் பாராட்டினார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...