கோவை சோமனூர் அருகே போலி ஆவணம் கொடுத்து வங்கியில் 10 கோடி மோசடி - மேனேஜர் உட்பட இருவர் கைது..!

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் சோமனூர் கிளையில் மேலாளராக பணியாற்றியவர் 17 பேருக்கு 10 கோடியே 73 லட்சம் ரூபாய் கடன் வழங்கி மோசடி செய்துள்ளார்.


கோவை: கோவை சோமனூரில் போலி ஆவணங்களை கொடுத்து வங்கியில் 10 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக வங்கி மேலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மண்டல அலுவலகத்தில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருபவர் ஜெகன் குமார். இவர், கோவை மாவட்ட குற்றப்பிரிவில் ஒரு புகார் கொடுத்தார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் சோமனூர் கிளையில் முன்பு மேலாளராக பணியாற்றிய ராஜேஷ், 17 பேருக்கு 10 கோடியே 73 லட்சம் ரூபாய் கடன் வழங்கியுள்ளார்.

இந்த கடன்களுக்கு ஈடாக வழங்கப்பட்ட சொத்து ஆவணங்கள் போலியானவை என்று விசாரணையில் தெரியவந்தது.

ஒரு சில சொத்துக்களின் மதிப்பை மிக அதிகமாக காட்டியும், இல்லாத நிறுவனங்களை இருப்பதாக காட்டியும் கடன் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இதனை விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், போலி ஆவணங்கள் என்று தெரிந்தும் கடன் வழங்கிய வங்கி கிளை முன்னாள் மேலாளர் ராஜேஷ், போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த கனகராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், மோசடியில் ஈடுபட்ட கார்த்திகேயன், ராதிகா, சம்பத்குமார், துரைராஜ், மகேஸ்வரி, ராஜூ ஆகிய ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...