கோவை சிவானந்தாகாலணி பகுதியில் மருந்தக உரிமையாளரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட முதியவர் புகார்..!

மேலும், தாக்குதல் நடத்திய 15 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடையில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்கள், பணத்தை மீண்டும் திருப்பி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.


கோவை: கோவை சிவானந்தாகாலணி பகுதியில் மருந்தக உரிமையாளரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட முதியவர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

கோவை சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பிரதீப் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த 1986 முதல் மருந்தகம் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பிரதீப் குமார் சுமார் 15 பேருடன் வந்து சீனிவாசனை தாக்கியதாகவும், கடையில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்றதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சீனிவாசன் கோவை மாநகர காவல் ஆணையாளர் புகார் அளித்தார்.

இது குறித்து சீனிவாசன் கூறும்போது:-

வாடகையை உயர்த்துவது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதீப் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கடைக்கு வந்த பிரதீப் மற்றும் அவரது நண்பர்கள் 15 பேர் கடைக்குள் புகுந்து மின் இணைப்பைத் துண்டித்து உள்ளே இருந்த பணம் மற்றும் மருந்து பொருட்களை சேதப்படுத்தி சென்றனர். இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் அளிக்கச் சென்ற போது, போலீசார் புகாரை ஏற்க மறுப்பதாகவும் தன் மீது வழக்கு பதிவு செய்வோம் என போலீசார் மிரட்டுவதால் சீனிவாசன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.

மேலும், தாக்குதல் நடத்திய பிரதீப் உள்ளிட்ட 15 பேர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடையில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்கள், பணத்தை மீண்டும் திருப்பி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...