கோவையில் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய வாலிபர்கள் மீது வழக்கு பதிவு..!

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணு சங்கரையும், அவரது நண்பர்களையும் தாக்கியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் விஷ்ணு சங்கர் (19). இவர் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறார்.

இவர் தனது நண்பர்கள் ஹரிஹரன் மற்றும் சிவராமன் உடன் சேர்ந்து நேற்று மாலை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செருப்பு வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த 3 வாலிபர்கள் விஷ்ணு சங்கர் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் விஷ்ணு சங்கரையும் அவரது நண்பர்களையும் அடித்து உதைத்தனர். இதில் அவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விஷ்ணு சங்கர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணு சங்கரையும் அவரது நண்பர்களையும் தாக்கியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...