திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள தேர்தல் பணிமனையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் புகைப்படங்களை கிழித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் பாஜக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் இருந்த பிரதமர் மோடி மற்றும் வேட்பாளர் புகைப்படங்கள் கிழிக்கப்பட்டதாக பாஜக சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 44வது வார்டு பகுதியில் பாஜக வேட்பாளராக சிவகுமார் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இதற்காக ஈஸ்வரன் கோவில் அருகே தேர்தல் பணிமனை அலுவலகம் அமைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் பணிமனை அலுவலகத்தின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த வேட்பாளரின் புகைப்படம் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி ஆகியோரின் படங்களை கிழித்து சேதப்படுத்தி இருப்பதாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.