கோவையில் உள்ளாட்சித் தேர்தலுக்காக பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வருகை..!

கோவை உப்பிலிபாளையம் மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள பழைய பாஸ்போர்ட் அலுவலகத்திலும், வடகோவை மாநகராட்சி பள்ளியிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவையில் உள்ளாட்சித் தேர்தலுக்காக பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன.

கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

கோவை மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்துவதற்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கன்ட்ரோல் யூனிட்டுகள் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டு, உப்பிலிபாளையம் மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள பழைய பாஸ்போர்ட் அலுவலக வளாகத்திலும், வடகோவை மாநகராட்சி பள்ளியிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தேர்தலுக்கு பயன்படுத்த, 2,322 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 20 சதவீத 'ரிசர்வ்' என, 484 இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு இருந்தன.

இந்நிலையில், மாநகராட்சி 97வது வார்டில், 18 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், 19 பூத்களில் இரண்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கி இறுதி பட்டியல் வெளியிட்டதால் 'பேலட் ஷீட்' அச்சடிக்கப்பட்டு விட்டது.

மேலும், இன்று முதல், 16ம் தேதி வரை இயந்திரங்களில் அவை பொருத்தப்பட உள்ளன. அதனால், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இயந்திரங்கள், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா முன்னிலையில் நேற்று சரிபார்க்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...