கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே போலீசார் வாகன சோதனையில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்..!

மேலும், கஞ்சா கடத்திய இருவரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே போலீசாரின் தீவிர வாகன சோதனையில் சிக்கிய 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் காவல் ஆய்வாளர் கண்ணனுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக இரகசிய தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து, உதவி ஆய்வாளர் முரளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் பெரியநாயக்கன்பாளையம் கட்டாஞ்சி மலைப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பியுள்ளனர்.

பின்னர், அவர்களை விரட்டிப்பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். இதனையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸ் பாணியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் ஒருவன் பெயர் ராமு பிரகாஷ் (19) என்பதும், தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியை சேர்ந்தவன் என்பதும், மற்றொருவன் ஊட்டி புளூ மவுண்டன் பகுதியை சேர்ந்த சரண் (20) என்பதும், தற்போது பெரியநாயக்கன்பாளையம் வஞ்சிமா நகர் பகுதியில் தற்போது தங்கியிருப்பதும், சட்டவிரோதமாக விற்பனைக்காக வெள்ளை நிற சாக்கு பையில் 18 கிலோ கஞ்சாவினை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 18 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...