மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு எருமை தண்ணீர் குடிப்பதற்காக அருகிலுள்ள குட்டையில் இறங்கியுள்ளது.
கோவை: வால்பாறை பகுதியில் தண்ணீர் குடிக்க சென்ற காட்டெருமை சேற்றில் சிக்கி தவித்த நிலையில், இரண்டு மணி நேரமாக போராடி வனத்துறையினர் மீட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு எருமை தண்ணீர் குடிப்பதற்காக அருகிலுள்ள குட்டையில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், குட்டையில் இறங்கிய காட்டெருமை சேற்றில் சிக்கி வெகுநேரமாக வெளியேற முடியாமல் போராடி உள்ளது. இதைக்கண்ட எஸ்டேட்டில் பணிசெய்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மனித விலங்கு மோதல் தடுப்பு குழுவினர் சேற்றில் சிக்கித் தவித்த காட்டெருமையை வெளியே கொண்டுவருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டனர்.

சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டெருமையை உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். சேற்றில் சிக்கி தவித்த காட்டெருமை வெளியில் வந்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் வனப்பகுதிக்குள் சென்றது.