கோவையில் மர்மான முறையில் இறந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவையில் மர்மான முறையில் ரெட் டாக்சி (Red taxi)ஓட்டுநர் இறந்ததையடுத்து, ஓட்டுநரின் குடும்பத்திற்கு உடனடியாக இழப்பீடு வழங்க கோரி 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை வடவள்ளி ஓணம்பாளையம் தனியார் விடுதி அருகே டாக்ஸி ஓட்டுநர் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்டு, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வடவள்ளி ஓணம்பாளையம் தனியார் விடுதி அருகே உடலில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்குச் சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரனையில் சடலமாக மீட்கப்பட்டவர். கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த சனு(28) என்பதும், ரெட் டாக்ஸி நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணி புரிந்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சக ஓட்டுநர்கள் கூறும் போது நேற்று இரவு அவர் தொண்டாமுத்தூர் பகுதியில், வாடகை சென்றதாகவும், அப்போது தொண்டாமுத்தூர் ஓணம்பாளையம் தனியார் விடுதியிலிருந்து கோவை விமான நிலையம் வரை செல்ல வேண்டும் என சனுக்கு அழைப்பு வந்ததாகவும், அங்கு சென்ற பிறகு செல்போன், ஜி.பி.எஸ். இணைப்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

மேலும், சனு உடல் கார் பின்புறத்தில், தலை, முதுகு பகுதிகளில் ரத்த காயங்கள் இருந்ததாகவும், பணம் வைக்கும் பாக்கெட் வெளியே வந்திருந்ததாகத் தெரிவித்தனர். அதே போல் காரில் ஏதே பொடி தூவி இருந்ததாகத் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்தநிலையில், மர்மமான முறையில் இறந்த டாக்சி டிரைவரின் குடும்பத்தாருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, 200 க்கும் மேற்பட்ட ரெட் டாக்சி டிரைவர்கள், சாய்பாபா காலனியில் உள்ள ரெட் டாக்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...