இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தின் தென்னிந்தியப் பிராந்திய சபை, சிறந்த பிராந்திய சபையாகத் தேர்வு

ஐசிஏஐ’யின் கோவை கிளையின் முன்னாள் தலைவரான பட்டயக் கணக்கறிஞர் கே.ஜலபதி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகையில் பட்டயக் கணக்கறிஞர்களின் நலனுக்காகவும் சிஏ., மாணவர்களின் நலனுக்காகவும் செயலாற்றி வருகிறார்.

கோவை: இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தின்(ஐசிஏஐ) தென்னிந்தியப் பிராந்திய சபை, 2021 – 2022 ஆம் ஆண்டின் சிறந்த பிராந்திய சபையாக ஐசிஏஐ’யால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பட்டயக் கணக்கறிஞர் கே. ஜலபதி அவர்களை தலைவராகக் கொண்டுள்ள 'ஐசிஏஐ’யின் தென்னிந்தியச் சபையானது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி, லக்‌ஷதீப் தீவுகள் பகுதிகளில் உள்ள சுமார் 60,000க்கும் மேற்பட்ட பட்டயக் கணக்கறிஞர்களுக்கும் சுமார் 3,00,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் சேவையாற்றி வருகிறது.

பிப்ரவரி 4 ஆம் தேதியன்று புது டெல்லியில் நடைபெற்ற 'ஐசிஏஐ’யின் 72ஆம் ஆண்டின் வருடாந்திர விழாவில் மத்திய அரசின் இணை நிதித்துறை அமைச்சரான முனைவர். பக்வத் கிருஷ்ணராவ் காரட் அவர்கள் இவ்விருதினை 'ஐசிஏஐ’யின் தென்னிந்தியப் பிராந்திய சபையின் தலைவர் பட்டயக் கணக்கறிஞர் கே. ஜலபதியிடம் வழங்கினார். 'ஐசிஏஐ’யின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சூழ இப்பெருமைக்குரிய விருதினை அவர் பெற்றார்.

ஐசிஏஐ’யின் கோவை கிளையின் முன்னாள் தலைவரான பட்டயக் கணக்கறிஞர் கே.ஜலபதி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகையில் பட்டயக் கணக்கறிஞர்களின் நலனுக்காகவும் சிஏ., மாணவர்களின் நலனுக்காகவும் செயலாற்றி வருகிறார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...