பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது..!

பின்னர், சிறுமியை திருமணம் செய்த வாலிபரை கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே 17 சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஆனைமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 2021ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21ம் தேதி காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் ஆழியாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில், சிறுமியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சிவா(20) என்பவர், அழைத்து சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் சிறுமியை அழைத்துக் கொண்டு ஆனைமலை அருகே உள்ள கிராமத்திற்கு வந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர்.

மேலும் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவரை கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...