கோவையில் பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளை டிஐஜி முத்துசாமி பார்வையிட்டார்

கோவையில் இன்று பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளை டிஐஜி முத்துசாமி பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரித்து அறிவுரைகளை வழங்கினார்.


கோவை: கோவையில் இன்று பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளை டிஐஜி முத்துசாமி பார்வையிட்டார்.

கோவையில் இன்று கோவை சரக காவல் டிஐஜி முத்துசாமி தலைமையில், மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் முன்னிலையில் பேரூர் கோட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு, மதுக்கரை, காக்கா சாவடி, பேரூர், ஆலந்துறை, காருண்யா நகர், தொண்டாமுத்தூர், வடவள்ளி ஆகிய காவல் நிலையங்களில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 தொடர்பாகச் சட்ட ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம் வடவள்ளி காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்றது.



அதன் பின்னர் மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களைப் பார்வையிட்ட பின்பு காவல்துறை துணைத்தலைவர் நகராஜபுரம், நம்பி அழகன் பாளையம், தாளியூர், அட்டுகள், கெம்பனூர். தொண்டாமுத்தூர், பூலுவபட்டி, பலயம்கொட்டை, சுண்டக்காமுத்தூர், அறிவொளி நகர் ஆகிய இடங்களில் உள்ள பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளிலும் பார்வையிட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரித்து அறிந்து கொண்டார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...