ஒன்றிய அரசு தமிழகத்திற்கு எவ்வளவு வரியை அளிக்கிறது என அவர்களால் சொல்ல முடியாது, சொல்லவும் மாட்டார்கள் -அமைச்சர் செந்தில்பாலாஜி

ஒன்றிய அரசு தமிழகத்திற்கு எவ்வளவு வரியை அளிக்கிறது என அவர்களால் சொல்ல முடியாது, சொல்லவும் மாட்டார்கள் என கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.


கோவை: ஒன்றிய அரசு தமிழகத்திற்கு எவ்வளவு வரியை அளிக்கிறது என அவர்களால் சொல்ல முடியாது, சொல்லவும் மாட்டார்கள் என கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.



கோவை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.



அதன் ஒரு பகுதியாக உப்பிலிபாளையம் பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு (சிபிஎம்- மோகன்) ஆதரவு திரட்டி பிரச்சாரத்தை மேற்கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள் 7 நகராட்சி மற்றும் 33 பேரூராட்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வெற்றி பெறும் என தெரிவித்தார். நேற்றைய தினம் முதலமைச்சர் காணொளி வாயிலாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது கோவை மாவட்டத்தில் செய்த பல்வேறு திட்டங்களை அவர் கூறியதன் மூலம் பிரச்சாரத்திற்காக எங்கு சென்றாலும் மக்கள் தங்கள் ஓட்டு உதயசூரியனுக்கு என்று தெரிவித்து வருவதாகவும் எனவே கண்டிப்பாக திமுக வெற்றி பெறும் என தெரிவித்தார்.

சில இடங்களில் கழகத்தின் கட்டுப்பாடுகளை மீறி சிலர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர் என்றும் இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

நேற்றைய தினம் நடத்தப்பட்ட காணொளி பிரச்சாரத்தில் பல்வேறு மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் எனவும் அதற்கு முக்கிய காரணம் திமுக பொறுப்பேற்றவுடன் முதல் கட்டமாக கொரோனா நிவாரண நிதிக்கு கையெழுத்திட்டது மகளிர் தேவையான திட்டங்கள், விவசாயிகளுக்கான திட்டங்கள் இல்லம் தேடி கல்வி உங்கள் தொகுதியில் முதல்வர் போன்ற பல்வேறு திட்டங்களைச் செய்தது தான் என தெரிவித்தார்.

மேலும் தமிழக மக்கள் ஒன்றிய அரசுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி அளிக்கிறார்கள் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு எவ்வளவு வரி நீண்ட அளிக்கிறது என்பது குறித்து அவர்களால்(பாஜக) சொல்ல முடியாது எனவும் கடந்த காலங்களில் பள்ளித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மருத்துவ படிப்பு என்பதை மாற்றி எதற்காக நீட் தேர்வை கொண்டு வர வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலில் முதலமைச்சர் சாதனைகளை வேட்பாளர்கள் மக்களுக்கு எடுத்துக்கூறி வாக்குகளைச் சேகரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...