உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தொடர்கிறது - விஸ்வஜன முன்னேற்ற கழகம் அறிவிப்பு..!

மேலும், உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணியை மாபெரும் வெற்றிபெறச் செய்வோம் என்று தெரிவித்தார்.


கோவை: உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தொடர்வதாக கோவையில் விஸ்வஜன முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கோவையில் விஸ்வ ஜன முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் விஸ்வஜன மாநில நிர்வாகிகள், சென்னை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலில் திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தோம். மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் மிகப்பெரும் சக்தியாக திமுக ஆட்சி அமைத்தது. மு.க ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக இன்று தமிழக மக்களுக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இப்பொழுது நடைபெற உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலிலும் திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் பணி செய்து மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டும். இது வரலாற்றுச் சாதனையாக அமைய வேண்டும் என்று மாநில நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கும் காணொலி காட்சி மூலம் தெரிவித்து உள்ளோம்.

மேலும், அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறச் செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...