கோவையில் முதல் முறையாக தேர்தலை சந்திக்கும் நான்கு புதிய நகராட்சிகள்..!

நகராட்சியின் முதல் தலைவர் பதவியை கைப்பற்றுவது யார் என்பதில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவையில் புதிதாக உருவாக்கப்பட்ட, 4 நகராட்சிகள் முதல்முறையாக தேர்தலை சந்திக்கும் நிலையில், நகராட்சியின் முதல் தலைவர் பதவியை கைப்பற்றுவது யார் என்பதில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகளிடையே, தேர்தல் களத்தில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பேரூராட்சிகளாக இருந்த கருமத்தம்பட்டி, கூடலூர், மதுக்கரை, காரமடை ஆகியவை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

இந்த 4 நகராட்சிகளும், முதல் முறையாக தேர்தலை சந்திக்கின்றன. இந்த நகராட்சிகளில் முதல் நகராட்சி தலைவர்கள் தேர்வாக உள்ளதால் தேர்தல் களம் ஆரம்பத்திலேயே சூடுபிடித்துள்ளது.

உள்ளாட்சிகளில், 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மகளிர் குழுவினர், பெண்கள் அமைப்பினர் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரம், நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க., - அ.தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவுவதால், தேர்தல் விதிமீறல்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது. இதனால், இந்த நான்கு நகராட்சிகளில் மாநில தேர்தல் ஆணையம் கூடுதல் கவனம் செலுத்தி, தேர்தலை சிறப்பாக நடத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...