கோவையில் மது அருந்த பணம் தராத மனைவி, மகளை அடித்து உதைத்த தொழிலாளி சிறையில் அடைப்பு..!

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் மது அருந்த பணம் தராத மனைவி, மகளை அடித்து உதைத்த தொழிலாளி சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை சுக்ரவார் பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கிலி ஆசாரி என்பவரின் மகன் செந்தில்குமார் (48). இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். நகை பட்டறை வேலை செய்துவரும் செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதன் காரணமாக மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று செந்தில்குமார் மது அருந்த தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது விஜயலட்சுமியும் அவரது மகளும் பணம் தர மறுத்ததோடு செந்தில்குமார் இடம் தகாத வார்த்தை பேசி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் மனைவி மற்றும் மகளை அடித்து உதைத்தார்.

இதில் காயமடைந்த அவர்கள் வேரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...