கோவையில் அதிமுக வேட்பாளர் சர்மிளா சந்திரசேகர் மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து பழங்குடியின மக்களிடம் வாக்கு சேகரிப்பு..!

கோவை மாநகராட்சி 38வது வார்டு அதிமுக வேட்பாளர் டாக்டர் சர்மிளா சந்திரசேகர் மருதமலை முருகன் கோவிலில் தரிசனம் செய்து அங்குள்ள பழங்குடியின மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.


கோவை: கோவை மாநகராட்சி 38வது வார்டு அதிமுக வேட்பாளர் டாக்டர் சர்மிளா சந்திரசேகர் நேற்று மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து அங்குள்ள பழங்குடியின மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.

வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி 38து வார்டில் அதிமுக சார்பில் சர்மிளா சந்திரசேகர் களம் காண்கிறார்.

இந்த நிலையில், கோவை மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சர்மிளா சந்திரசேகர் அங்குள்ள பழங்குடி மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.



முன்னதாக சர்மிளா சந்திரசேகரை, பழங்குடியின மக்கள் ஆர்த்தி எடுத்தும், சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். அப்போது, அதிமுக ஆட்சியில் அப்பகுதி மக்களுக்கு பட்டா, வீடுகள், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செய்து கொடுத்ததை நினைவு கூர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து மருதமலை அடிவாரத்தில் உள்ள வியாபாரிகள், தளபதி நகர், கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.



அப்போது பேசிய சர்மிளா சந்திரசேகர், இந்த பகுதியில் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தான் வெற்றி பெற்றால் நிலுவையில் உள்ள விடுபட்ட பணிகளை செய்து தருவேன் எனவும் கூறினார்.

இந்த பிரச்சாரத்தின் போது மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் அன்பு என்கிற செந்தில்பிரபு, 38வது வார்டு செயலாளர் ராயப்பன், மாநில வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வக்கீல் மனோகரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...