கோவையில் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பி ஓடிய வாலிபர்கள்; சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

கோவை என் ஜி புதூர் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், இரு சக்கர வாகனத்திற்கு ரூ.800 க்கு பெட்ரோல் அடித்து கொண்டு பணம் கொடுக்காமல் தப்பிச் சென்ற வாலிபர்களை துடியலூர் போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை :கோவை, கே என் ஜி புதூர் அருகே உள்ள ஒருபெட்ரோல் பங்கில், பைக்கில் வந்த இருவர், பெட்ரோல் போட்டு விட்டு தப்பி ஓடிய சம்பவம் குறித்தசிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவை என் ஜி புதூர் அருகே உள்ள ஒருபெட்ரோல் பங்கில்,

மேலாளராக பணி புரிபவர் பிரபாகரன்.இவர் நேற்று இரவு 9 50 மணிக்கு பணியில் இருந்த போது, பெட்ரோல் அடிக்க இரு வாலிபர்கள் ஒரு பைக்கில் வந்துள்ளனர். அவர்கள் கூறியது போல், மனோகரன் ரூபாய் 800 க்கு இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் அடித்துள்ளார்.



இதையடுத்து, பெட்ரோல் போட்டுவிட்டு,

பிரபாகரன் அவர்களிடம்

பணம் கேட்டபோது அந்த வாலிபர்கள் இருவரும் பணம் கொடுக்காமல் அங்கிருந்து பைக்கில் தப்பி செல்ல முயற்சித்துள்ளனர். உடனே, சுதாரித்துக்கொண்டு பிரபாகரன் அந்தமோட்டார் சைக்களின்பின் இருக்கையில் அமர்ந்திருந்தவரின் கையை பிடித்து தடுத்து நிறுத்த முயன்றார்.



பின்னர், அவர்களை பிடிக்க முடியாத பிரபாகரன், நிலைதடுமாறி அருகிலிருந்த தடுப்பில் மோதி விழுந்தார். இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில், துடியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் பங்கில் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...