கோவை பெரிய தடாகத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணி இரவிலும் தொடர்ந்து வருகிறது.

யானைக்கு பழங்கள், வெல்லம் ஆகியவையும் புளி, மிளகு, சுக்கு, மஞ்சள் கலந்த சித்தா சூரணமும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இரவிலும் மருத்துவர்கள் முன்னிலையில் சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை :கோவை வனக்கோட்டம்,பெரிய தடாகம் கிராமம்அருகில் தனியார் பட்டா நிலத்தில் இன்று காலை உடல் நலிவுற்ற நிலையில் பெண் யானை ஒன்று படுத்திருந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலையடுத்து வனப் பணியாளர்கள் மருத்துவ முதலுதவி சிகிச்சைக்களை அளித்து வருகின்றனர்.



இதனை தொடர்ந்து, முதுமலை வனக் கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் வடவள்ளி அரசு கால்நடை மருத்துவர் பிரபு மற்றும் ஆனைக்கட்டி அரசு கால்நடை மருத்துவர் பிரபாகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர்யானைக்கு இரத்த நாளம் வழியாக குளுக்கோஸ்உள்ளிட்ட ஊட்டச்சத்து மருந்துகளும், உப்பு வெந்நீர் ஒத்தடம் ஆகியவைவழங்கப்பட்டன.

மேலும், பழங்கள், வெல்லம் ஆகியவையும் புளி, மிளகு, சுக்கு, மஞ்சள் கலந்த சித்தா சூரணமும் வழங்கப்பட்டு மாலையில் யானையை JCB உதவியுடன் எழுப்பி நிற்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அது பலனளிக்காத நிலையில், தொடர்ந்து இரவிலும்மருத்துவர்கள் முன்னிலையில் சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



யானையின் மருத்துவ சிகிச்சை பணிகளை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் நேரில் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார். மேலும் ஓய்வு பெற்ற வனக் கால்நடை மருத்துவ அலுவலர் மரு. மனோகரன்நிகழ்விடம் வந்திருந்து மருத்துவ குழுவினருக்கு ஆலோசனைகள் வழங்கி சென்றனர். யானைக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மாவட்ட வன அலுவலர் அசோக் நேரில் சென்று பார்வையிட்டார்.

இப்பணிகளின் போது கோவை கோட்ட வன விரிவாக்க மைய உதவி வனப்பாதுகாவலர், கோவை வனச்சரக அலுவலர், மதுக்கரை வனச்சரக அலுவலர், கோவை சரக வனவர், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...