கோவை மாவட்டம் தோலம்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி இருளர் இனத்தை சேர்ந்த ஒருவர் பலி.

கோவை மாவட்டம் தோலம்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி இருளர் இனத்தை சேர்ந்த நஞ்சன் என்பவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை:: கோவை மாவட்டம் தோலம்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி இருளர் இனத்தை சேர்ந்த நஞ்சன் என்பவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையேசோகத்தை ஏற்படுத்தியது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தோலம்பாளையம் அருகே மொட்டியூர், சீங்குழி உள்ளிட்ட சுமார் 10 க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில், இருளர் இனத்தை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் யானை, காட்டெருமை, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு அவ்வப்போது வெளியே வருவது வழக்கம். 

இந்நிலையில், சீங்குழி பகுதியை சேர்ந்த நஞ்சன் (வயது 50) மற்றும் அவரது அக்கா மகன் நஞ்சப்பன் (வயது 28) ஆகிய இருவர் நேற்று மாலை 7 மணியளவில் மொட்டியூர் அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டி இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளனர்.

 

அப்போது,அப்பகுதியில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானைநஞ்சனை திடீரென்று தாக்கியுள்ளது. இதில், நஞ்சனுக்கு முகம் மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மற்றொருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காரமடை போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற நபரை காட்டு யானை தாக்கி பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...