கோவை நகர்புற உள்ளாட்சி தேர்தல்: ஒற்றுமையுடன், இணைந்து பணியாற்றி மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்...!

கடந்த 8 மாத காலத்தில் திமுக அரசால்  செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குகளை கேட்க வேண்டும்.



கோவை: கடந்த 8 மாத காலத்தில் திமுக அரசால்செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டங்களை, பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குகளை கேட்க வேண்டும், என கோவை குனியமுத்தூர் பகுதியில்நடைபெற்ற திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில்மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். 



வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்,திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம்செய்யும் நிகழ்ச்சி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வருகிறார்.

அதன்படி, இன்று தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், குனியமுத்தூர் பகுதியில் உள்ள முத்துசாமி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.



கோவை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சி ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி , திமுக ஆட்சி அமைத்த பிறகு கொண்டுவந்துள்ள பல கோடி மதிப்பிலான திட்டங்களை குறித்து பேசினார். 

உள்கட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின்பு செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து வாக்குகளை சேகரிக்க வேண்டும் எனவும், அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றி உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற பணியாற்றுமாறு, கேட்டுக் கொண்டார்.



Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...