கிணத்துக்கடவில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண்களிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
கோவை: கிணத்துக்கடவில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண்களிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
கோவை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரதினம் உத்தரவின் பேரில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கிணத்துக்கடவு கலைவானர் வீதியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்திற்கு நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண்களிடம் காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிணத்துக்கடவு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையில் பெண் காவலர் பவதாரணி பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காவல்துறையிடம் புகார் அளிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.