கோவை சிங்காநல்லூர் அருகே அரசு பேருந்து மோதி தந்தை, மகன் பலி

கோவை சிங்காநல்லூர் அருகே பள்ளிக்கு அழைத்து சென்றபோது அரசு பேருந்து மோதி தந்தை, மகன் பலியான சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே அரசு பேருந்து மோதி தந்தை, மகன் பலியான சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபஸ்டின் சாமுவேல்(40). தொழிலாளி. இவர் தனது 8-வது படிக்கும் மகன் கிளாரின்(13), மற்றும் 1-வது படிக்கும் மகன் பிராங்க்ளின் (5) ஆகியோரை இன்று காலை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

அவர் சிங்காநல்லூர் அருகே உள்ள தியேட்டர் அருகே சென்றபோது எதிரே வந்த வாலிபர் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது ஏறியது.

இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்த ஜெபஸ்டின் சாமுவேல் மற்றும் அவரது மகன் கிளாரின் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பிராங்களின் காயமடைந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் மற்றும் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த பிராங்கிளின் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாகக் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது விபத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் அவரது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...