அதிமுக முன்னாள் கவுன்சிலர் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற 3 லட்சம் ரூபாயைத் தேர்தல் பறிக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை: அதிமுக முன்னாள் கவுன்சிலர் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற 3 லட்சம் ரூபாயைத் தேர்தல் பறிக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் கல்பனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது தொண்டாமுத்தூரிலிருந்து தென்கரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் உலகநாதனை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது அவரிடம் ஆவணமின்றி ரூ.3 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் உலகநாதன் விவசாயத்திற்குப் பணம் எடுத்து வந்ததாகக் கூறி அதிகாரிகளிடம் முறையிட்ட போதும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை விடுவிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்து அனுப்பி வைத்தனர்.