கோவையில் மினிடோர் வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

இளைஞரின் உடல் வாகனத்தில் சிக்கிய நிலையில், இழுத்துச் செல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.



கோவை: கோவையில் மினிடோர் வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 29ம் தேதியன்று கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையின் முன்புள்ள பாலத்தில் இருந்து கீழே இறங்கிய இருசக்கர வாகனம், சிட்கோவில் இருந்து வெளியே வந்த மினிடோர் சரக்கு வாகனத்தின் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து போத்தனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த இளைஞர் வடவள்ளி பகுதியை சேர்ந்த நிஷாந்த்ராஜ்(22) என்பதும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், இரவு நேரப் பணி முடிந்து வீடு திரும்பும் பொழுது இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் மினிடோர் வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், மினிடோர் வாகனம் இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் இருசக்கர வாகனம் மோதியது தெரிந்தும் நிறுத்தாமல் சென்ற மினிடோர் வாகன ஓட்டிநரை காவல்துறை தேடி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...