கோவை அன்னூர் அருகே 80 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு - கிரேன் உதவியுடன் பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர் ..!

தொடர்ந்து 2வது நாளாக 2வது பசுமாட்டினை பத்திரமாக மீட்டுள்ள தீயணைப்புத்துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.



கோவை: கோவை அன்னூர் அருகே 80 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டினை கிரேன் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள தாசபாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி கந்தசாமி. இவர் தனது நிலத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மதியம் தனது பசு மாட்டினை மேய்ச்சலுக்காக விவசாய கிணற்றின் அருகே கட்டி வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் மேய்ச்சலுக்காகச் சென்ற அந்த பசு மாடு திடீரென கால் தவறி விவசாயி கந்தசாமிக்கு சொந்தமான 80 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது.



இதனையடுத்து, பசுமாட்டினை பார்க்க வந்த விவசாயி மாடு கிணற்றினுள் விழுந்து நீந்தி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அன்னூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர், சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஆழம் அதிகமாக இருந்த காரணத்தால் கயிறு கட்டி பசு மாட்டினை தூக்க முடியாததால் கிரேன் உதவியை நாடினர்.

இதனையடுத்து, கிரேன் வரவழைக்கப்பட்டு கிரேன் உதவியுடன் பசுமாட்டினை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.



தொடர்ந்து 2வது நாளாக 2வது பசுமாட்டினை பத்திரமாக மீட்டுள்ள தீயணைப்புத்துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.



Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...