கோவையில் டாஸ்மாக் கடையில் வாட்டர் பாட்டில் தர மறுத்த அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து

புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வாட்டர் பாட்டில் தர மறுத்த அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: டாஸ்மாக் கடையில் வாட்டர் பாட்டில் தர மறுத்த அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை புலியகுளம் அந்தோணியார் தேவாலயம் பின்புறம் வசித்து வருபவர் அல்போன்ஸ் என்பவரின் மகன் ஜோஜி. இவர் மாலை நேர டிபன் கடையில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ஜோஜியும் அவரது சகோதரர் ராபினும் புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கியுள்ளனர். பின்னர், அங்கிருந்த பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு மது அருந்தி கொண்டிருந்த மற்றொரு நபர் ஜோஜியிடம் வாட்டர் பாட்டில் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு ஜோஜீ மறுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஜோஜியும் அவரது சகோதரரும் வீட்டிற்கு சென்று பின்னர் சிறிது நேரம் கழித்து புலியகுளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, வாட்டர் பாட்டில் கேட்டு டாஸ்மாக் கடையில் நின்று கொண்டிருந்த நபர்கள் ஜோஜியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். மேலும் தகாத வார்த்தையில் பேசியதோடு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்த முயன்றனர்.

இதில், ஜோஜி மற்றும் ராபின் தலை மற்றும் கைகளில் கத்தி குத்து பட்டது. இதில் இருவருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஜோஜி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் விஜய் மற்றும் ஆறுமுகம் என்பவரின் மகன் என்கிற பிரதீப் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சார்லஸ் என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...