கோவையில் வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை

வெள்ளலூர் இந்திரா நகர் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகள் 70 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: வெள்ளலூர் இந்திரா நகர் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை போத்தனூர் அடுத்த வெள்ளலூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சடையப்ப கோனார் என்பவரின் மகன் ரவிச்சந்திரன்( 52). இவர் தனியார் இன்ஜினியரிங் நிறுவனத்தில் போர்மேன் ஆக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று காலை அவர் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். அவரது மனைவியும் மகளும் உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்றுவிட்டு மீண்டும் நேற்று மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகள் 70 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ரவிச்சந்திரன் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...