‘பப்ஜி’ விளையாட்டால் விபரீதம்: திருப்பூரில் வாலிபரை அரிவாளால் வெட்டிய முதியவர்

திருப்பூரில் இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு முதியவரை தூங்க விடாமல், நண்பர்களுடன் ‘பப்ஜி’ விளையாடி இடையூறு செய்து வந்த வாலிபரை அரிவாளால் வெட்டிய முதியவர் கைது செய்யப்பட்டார்.


திருப்பூர்: திருப்பூரில் இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு முதியவரை தூங்க விடாமல், நண்பர்களுடன் ‘பப்ஜி’ விளையாடி இடையூறு செய்து வந்த வாலிபரை முதியவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் முருகம்பாளையம், பாறைக்காட்டை சேர்ந்தவர் கார்த்திக் தாராபுரத்தில் அரசு ஐ.டி.ஐ.,யில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வீட்டுக்கு அருகே துவைக்கும் கல்லில் அமர்ந்து கார்த்திக் தனது நண்பர்களுடன் அடிக்கடி ‘பப்ஜி’ விளையாடுவது வழக்கம்.

நேற்று இரவு வழக்கம் போல் நண்பர்களுடன் அமர்ந்து கார்த்திக் ‘பப்ஜி’ விளையாடினார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தூங்குவதுக்கு இடையூறாக இருப்பதாக வந்து கூறி சத்தம் போட்டார். இதனால், இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த ராமசாமி வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து கார்த்திக்கை வெட்டினார். காயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராமசாமியை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ராமசாமி, ஒரு கொலை வழக்கு தொடர்பாகத் தண்டனை அனுபவித்துக் கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன் சிறையிலிருந்து விடுதலையாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...