கோவை கிணத்துக்கடவு அருகே சேவல் வைத்து சூதாட்டம் நடத்திய 4 பேர் கைது..!

மேலும், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2 சேவல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சேவல் வைத்து சூதாட்டம் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கிணத்துக்கடவு பகுதியில் தாமரைக் குளம் அடுத்துள்ள மாசநாயகன்புதூர் ஆத்து மேட்டு பகுதியில் சேவல் சண்டை நடைபெறுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அங்கு சேவல் வைத்து சூதாடிக் கொண்டிருந்த காணியாலாம் பாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் (34), தாமரைக்குளம், மெயின் ரோட்டை சேர்ந்த சரத்குமார்(22), கோவை கணபதி நல்லாம்பாளையம் ராமசாமி நகரைச் சேர்ந்த செந்தில்குமார்(47), கோடங்கிபாளையம் கோபாலகிருஷ்ணன் (47) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2 சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...