தமிழக அளவில் கோவை பீளமேடு மற்றும் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு.

தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்களாக, கோவை பீளமேடு மற்றும் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையம், தேர்வு.


கோவை: தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் காவல்நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வரால் கேடயமும, பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்களாக, கோவை பீளமேடு மற்றும் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையம், தமிழக அளவில் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

காவல் நிலையங்களில் வழக்குகளை விரைந்து முடிப்பது, பதிவேடுகளை சரியாக பராமரிப்பது, காவல் நிலையத்தை சுத்தமாக வைத்து கொள்வது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக கோவை மாவட்டம், பீளமேடு காவல் நிலையம் மற்றும் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த, 2020-ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலைய விருது, திருப்பூர்தெற்கு காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக கோவை பந்தய சாலை காவல் நிலையம் தேர்வானது.

மேலும், இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்களில் முதலிடம் பிடித்த ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...