கேரளாவிற்கு பேருந்தில் போதைப்பொருள் கடத்திய எம்.பி.ஏ மாணவன் கைது

பெங்களூருவிலிருந்து கோவை வழியாகக் கேரளாவிற்கு பேருந்தில் போதைப்பொருள் கடத்திய எம்.பி.ஏ மாணவனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பெங்களூருவிலிருந்து கோவை வழியாகக் கேரளாவிற்கு பேருந்தில் போதைப்பொருள் கடத்திய எம்.பி.ஏ மாணவனை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து கேரள மாநிலத்திற்கு வளையார் வழியாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கேரள காவல்துறை ஆணையர் நாசருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் வாளையார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முஹமது ஹரீஸ் மற்றும் கலால் துறை அதிகாரிகள் வாளையார் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூருவிலிருந்து கோவை வாளையார் வழியாக கேரளா நோக்கி வந்த சுற்றுலா பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை இட்டபோது பயணி ஒருவரின் கையில் 8 கிராம் எம். டி. எம். ஏ போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பயணியிடம் நடந்த விசாரணையில், எர்ணாகுளம் மாவட்டம் கணியனூர் அடுத்த சேரா நெல்லூரை சேர்ந்த எபின் 26, என்பதும் எம்.பி.ஏ மாணவரான இவர் பெங்களூருவில் இருந்து கேரளாவிற்குப் போதைப் பொருட்களைக் கடத்தி செல்வது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து எபினை கைது செய்து அவரிடமிருந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...