நகர்புற உள்ளாட்சி தேர்தல்: கோவையில் வாக்கு சேகரிப்பு பணியில் எஸ்டிபிஐ

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் வாக்கு சேகரிப்பைத் துவக்கி உள்ளனர்.



கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தல் துவங்கிய நிலையில் வாக்கு சேகரிப்பு பணியில் எஸ்டிபிஐ ஈடுப்பட்டுள்ளனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் வாக்கு சேகரிப்பு பணிகளைத் துவக்கி உள்ளனர்.



அதன் தொடர்ச்சியாகக் கோவை மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் வாக்கு சேகரிப்பைத் துவக்கி உள்ளனர்.



எஸ்டிபிஐ கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 82 வது வார்டு வேட்பாளர் ரஷீதா பேகம் இன்று வாக்கு சேகரிப்பைத் துவங்கினார். அவர் போட்டியிடும் வார்டில் பொதுமக்களை சந்தித்து வாக்குகளைச் சேகரித்தார். அவருக்குப் பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்பளித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.



கடந்த முறையும் அந்த வார்டில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முஹம்மது சலீம் வெற்றி பெற்று பல்வேறு நலத்திட்டங்களை அப்பகுதிக்குச் செய்துள்ள நிலையில், இம்முறையும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் நிற்பது அக்கட்சிக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...