கோவையில் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவக்கம்..!

மேலும், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் முடிவடைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.



கோவை: கோவையில் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகளிலேயே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.



நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவையில் தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று முதல் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் இன்று பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்புகளுக்கு வரும் தேர்தல் பணியாளர்களுக்கு வாக்களிக்கும் கருவிகள் குறித்தும் தேர்தல் நடைமுறை குறித்தும் விளக்கமளிக்கப்படுகின்றது.



மேலும், பயிற்சி வகுப்புகளுக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் முடிவடைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.





Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...