நகர்புற உள்ளாட்சி தேர்தல்: கோவை மாநகராட்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக 11 இடங்களில் போட்டியிட முடிவு..!

இதையடுத்து, முதல் கட்டமாக 6 வேட்பாளர்களை அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் அறிமுகப்படுத்தினார்.


கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக 11 இடங்களில் போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை உக்கடம் பகுதியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது வேட்பாளர்கள் விருப்பமனு பெறப்பட்டது.



இதையடுத்து முதல் கட்டமாக 6 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக 11 இடங்களில் போட்டியிடுவதாகவும், முதல் கட்ட வேட்பாளர்கள் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், வார்டு சீரமைப்பு என்ற பெயரில் இஸ்லாமியர் அதிகம் உள்ள பகுதிகள் பெண்கள் வார்டாக அறிவித்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாகவும், இதனால் இருதரப்பினருக்கும் மோதல் உருவாகும் சூழல் உருவாவதாக தெரிவித்தார்.

மேலும், குறைவான கால இடைவெளியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் உள்ளதாக கூறினார். மேலும், வரும் தேர்தலில் பாஜக கூட்டணியை ஆதரிப்பது இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

கோவையில் செல்வபுரம் உக்கடம் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வார்டுகளில் தற்போது மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக வேட்பாளர்களை களம் இறங்கியுள்ளனர். இதனால் திமுக வாக்குகள் சிதர வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவிற்கு கூட்டணியில் இல்லாத போது ஆதரவளித்த மனிதநேய ஜனநாயக கட்சி இந்த முறை தனியாக களம் காண்கிறது. இதனால் திமுகவின் வாக்குகளை சிதறடிக்க வாய்ப்புள்ளதாக கூறினார்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...