கோவை உள்ளாட்சி தேர்தல் 2022: பாஜக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல்

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட பாஜக வினர் 485 பேர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், பாஜக மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில துணைத்தலைவர் கனகசபாபதி மற்றும் மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நேர்காணல் நடத்தி வருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திமுகவினர் வார்டு பங்கீடு குறித்து கூட்டணி கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று திமுக கூட்டணியில் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை இறுதியடையும் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, அதிமுக பாஜக கூட்டணியில் இது வரை வார்டு பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறாத சூழலில், கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.



பாஜக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறார். மத்திய அமைச்சர் எல்.முருகனுடன், அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கனகசபாபதி மற்றும் மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.



கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட பாஜக வினர் 485 பேர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், இன்று இரவு 10 மணி வரை நேர்காணல் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. நேர்காணலில் பங்கேற்பவர்களிடம், சுமார் 30 கேள்விகள் கேட்கப்படுகிறது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று இரவுக்குள், கோவை உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப்போகும் 100 வார்டுகளுக்கான பிரதிநிகள் அறிவிக்கபடுவார்கள், என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...