இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே மின்சார கம்பி உரசி தென்னை நார் ஏற்றிச்சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து கருகி நாசமானது.
பொள்ளாச்சி அருகே உள்ள கம்பாலபட்டியில் தனியாருக்கு சொந்தமான தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் இருந்து லாரி மூலம் 50 ஆயிரம் மதிப்புள்ள 125 பெண்டல் தென்னை நாரை வெள்ளாளபாளையம் பகுதிக்கு ஏற்றி செல்லப்பட்டது.
அப்போது, கம்பாலபட்டி சாலையில் வந்து கொண்டிருக்கும்போது தாழ்வான பகுதியில் மின் கம்பி உரசியதால் லாரியில் இருந்த தென்னைநார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக் கண்ட லாரி ஓட்டுநர் கலைச்செல்வன் வண்டியை நிறுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து, அக்கம்பக்கத்தினரும் தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மளமளவென எரியத்தொடங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், லாரியும் தென்னை நாரும் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.