கோவை உள்ளாட்சி தேர்தல் 2022: 424 பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை.

424 பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்படும். தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதுதவிர, இந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.



கோவை: கோவை மாவட்டத்தில் 424 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: "கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சியில் 1,290 வாக்குச்சாவடிகளும், 7 நகராட்சிகளில் 390 வாக்குச்சாவடிகளும், 33 பேரூராட்சிகளில் 632 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 2,312 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 

ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் இருப்பார்கள். இந்த வாக்குச்சாவடிகளில் மாநகராட்சியில் 169 வாக்குச்சாவடிகளும், 7 நகராட்சிகளில் 143 வாக்குச்சாவடிகளும், 33 பேரூராட்சிகளில் 112 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 424 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்படும். தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதுதவிர, இந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 

கோவை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக 2,312 கண்ட்ரோல் யூனிட், 2,312 பேலட் யூனிட் தயாராக உள்ளது. ஒரு பேலட் இயந்திரத்தில் 15 வேட்பாளர்களின் பெயர்களை சேர்க்க முடியும். எனவே, போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 15-ஐ தாண்டினால் கூடுதலாக ஒரு பேலட் இயந்திரம் இணைக்கப்படும்.

இதுதவிர, 10 சதவீத கன்ட்ரோல் யூனிட் மற்றும் 15 சதவீத பேலட் யூனிட் கூடுதலாக ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். இந்த தேர்தலில், 41 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 110 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 10 ஆயிரத்து 172 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுகின்றனர்.

இவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாள்வது குறித்து பயிற்சி விரைவில் அளிக்கப்பட உள்ளது. வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது", இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...